33 பேர் பலி: மொசாம்பியா விமானத்தை விமானியே மோத வைத்தார்- விசாரணையில் தகவல்
மொசாம்பியா நாட்டின் தலைநகர் மபுடோவில் இருந்து அங்கோலாயில் உள்ள லுயாண்டாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 27 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர்.அங்கோலா நாட்டு எல்லையில் வந்தபோது நமீபியாவின் தேசிய பூங்காவில் விழுந்து அந்த விமானம் நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 33 பேரும் பலியாகினர். இச்சம்பவம் கடந்த நவம்பர் மாதம் 29–ந்தேதி நடந்தது.விபத்து குறித்து மொசாம்பியா விமான போக்குவரத்து நிறுவன தலைவர் ஜோலோ ஆப்ரூ விசாரணை நடத்தினார். அதில், என்ஜீன் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகவில்லை. விமானத்தை ஓட்டிய விமானி கேப்டன் ஹெர்மினியோதான் வேண்டுமென்றே விமானத்தை தரையில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இது விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகும் தகவல் குறித்த எச்சரிக்கையையும் மீறி அவர் சாக்பிட் அறையை பூட்டிக் கொண்டார். அதனால் உடன் இருந்த மற்ற விமானியை அனுமதிக்கவில்லை.
விமானத்தை மோத செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இந்த தகவலை விசாரணை அதிகாரி ஆப்ரூ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply