ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட சீனத் தலைவர் மாவோவின் தங்கச் சிலை திறப்பு

சீன மக்கள் குடியரசு என்ற அரசியல் கட்சியை தோற்றுவித்ததன் மூலம் சீனாவின் மக்கள் எழுச்சிக்கும், பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய தலைவர், மா சே துங். சீனாவின் தந்தை என்றழைக்கப்படும் இவர் உருவாக்கிய சித்தாந்தங்களின் விளைவாகவே உலகின் வலிமை மிக்க நாடுகளின் பட்டியலில் சீனாவும் பிரதான இடத்தை கைப்பற்றியுள்ளது.இவரது பிறந்த நாளையும், இறந்த நாளையும் சீன மக்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், அவரது 120-வது பிறந்த நாளை 26௧2௨013 அன்று பிரமாண்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் சீன மக்கள் குடியரசு கட்சியினர் மும்முரமாக உள்ளனர்.

இதனையொட்டி, 100 மில்லியன் யுவான் (இந்திய மதிப்புக்கு சுமார் 100 கோடி ரூபாய்) செலவில் உருவாக்கப்பட்டுள்ள மா சே துங்கின் தங்கச் சிலை ஷென்சென் நகரில் திறக்கப்பட்டுள்ளது. 50 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட இந்த சிலை, நாற்காலியின் மீது அமர்ந்த நிலையில் மா சே துங் சிந்திக்கும் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாணிக்கக் கல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பீடத்தின் மீது, இந்த 32 அங்குல தங்கச் சிலையை 20 பொற்கொல்லர்கள் சுமார் 8 மாதங்கள் உழைத்து உருவாக்கியுள்ளனர். விலையுயர்ந்த நவரத்தின கற்களும் இதில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த தங்கச் சிலை இரவு நேரத்தில் ‘தகதக’ என மின்னி காண்போரை பரவசப்படுத்துகிறது.

தற்போது ஷென்சென்னில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த சிலை, அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் வரையில் அங்கு இருக்கும். பின்னர் அவர் பிறந்த பூமியான ஷவோஷானில் உள்ள நினைவிடத்தில் நிரந்தரமாக வைக்கப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply