ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சவால்களை எதிர்கொள்ளத் தயார் :மஹிந்த சம­ர­சிங்க

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேர­வையில் எந்­த­வொரு சவா­லையும் எதிர்­கொள்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் தயா­ரா­கவே இருக்­கின்­றது. இலங்­கைக்கு எப்­போதும் உதவி செய்­து­வரும் சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்­ஜீ­ரியா போன்ற நாடுகள் இம்­முறை ஐ.நா. மனித உரிமைப்பேர­வையில் இடம்­பி­டிக்­கின்­ற­மையின் கார­ண­மாக எமக்கு வலு­வான நிலைமை மனித உரிமை பேர­வையில் காணப்­ப­டு­கின்­றது என்று பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்­சரும் மனித உரி­மைகள் தொடர்­பான ஜனா­தி­ப­தியின் விசேட தூது­வ­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ளார். அந்த அறிக்­கையை பார்த்த பின்­னரே இலங்கை தனது அறிக்­கையை முன்­வைக்கும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி மைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் அது தொடர்­பி­லான இலங்கை அர­சாங்­கத்தின் தயார் நிலை குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

இம்­முறை மனித உரிமைப் பேரவை அமர்வில் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்­ள­மையின் கார­ண­மாக அதனை எதிர்­கொள்ள அர­சாங்கம் தயா­ரா­கி­வ­ரு­கின்­றது. அந்த அறிக்கை எவ்­வாறு அமையும் என்று எங்­க­ளுக்கு தெரி­யாது.

மனித உரிமைப் பேர­வையில் நவ­நீதம் பிள்­ளையின் அறிக்­கையை பார்த்த பின்னர் அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே எமது அறிக்கை அமையும்.

யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையை பொறுத்­த­மட்டில் இலங்­கை­யா­னது பல்­வேறு வகை­யான முன்­னேற்­றங்­களை வெளிப்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றது. இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றும் செயற்­பாட்டில் பாரிய முன்­னேற்­றத்தைக் காட்­டி­யுள்ளோம்.

இந்­நி­லையில் எதிர்­வரும் மார்ச் மாதத்­துக்கு முன்­னரும் பாரிய முன்­னேற்­றங்­களை வெளிப்­ப­டுத்த எதிர்­பார்க்­கின்றோம். நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளையும் அமுல்­ப­டுத்­தி­வ­ரு­கின்றோம். பாதிக்­கப்­பட்ட வடக்கு பிர­தே­சங்­களில் பாரிய முன்­னேற்­றங்­களை அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் முன்­னெ­டுத்­துள்­ளது.

இந்­நி­லையில், யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையில் நாங்கள் முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­மையின் கார­ண­மாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் எவ்­வ­கை­யான சவா­லையும் எதிர்­கொள்­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம். இலங்கை தொடர்பில் எழுப்­பப்­படும் கேள்­வி­க­ளுக்கும் பதி­ல­ளிப்போம்.

குறிப்­பாக இம்­முறை மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு ஆத­ர­வான நாடுகள் இடம்­பெற்­றுள்­ளன. விசே­ட­மாக சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்­ஜீ­ரியா ஆகிய நாடுகள் எமக்கு உதவி செய்யும் நாடு­க­ளாக உள்­ளன. எனவே அந்த நாடு­களின் பிர­சன்னம் எமக்கு வெகு­வான வலுவை மனித உரிமைப் பேர­வையில் அளித்­துள்­ளது.

எனவே நாங்கள் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத்தொட­ருக்கு தயா­ரா­கி­வ­ரு­கின்றோம். எவ்­வ­கை­யான நிலை­மை­யையும் சவா­லையும் எதிர்­கொள்­ளவும் தயா­ராக உள்ளோம். காரணம் பாரி­ய­ளவில் முன்­னேற்­றங்­களை நாங்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளோம் என்றார்.

இம்­முறை மனித உரிமைப் பேர­வையின் 25ஆவது கூட்டத் தொட­ருக்கு இலங்­கை­யி­லி­ருந்து பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்­சரும் மனித உரி­மைகள் தொடர்­பான ஜனா­தி­ப­தியின் விசேட தூது­வ­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க தலை­மையில் அமைச்­சர்கள் மட்ட தூதுக்­குழு கலந்­து­கொள்ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் 25 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

நவ­நீதம் பிள்ளை கடந்த வருடம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நிலையில் நாட்டின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து மதிப்­பீ­டு­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

அத்­துடன் அர­சியல் கட்­சிகள் மற்றும் சிவில் அமைப்­புக்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­புக்­க­ளையும் சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார். அந்­த­வ­கை­யி­லேயே அவர் இலங்கை தொடர்­பான அறிக்­கையை மனித உரிமைப் பேர­வையில் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

இது இவ்­வாறு இருக்க ஐக்­கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் டாக்டர் சலோகா பெயானி இம்மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளின்போது இலங்கை தொடர்பாக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply