இலங்கையர் ஐவருக்கு பாகிஸ்தான் உயர் கல்வி புலமைப்பரிசில்
பாகிஸ்தானில் உயர் கல்வி கற்பதற்காக இலங்கை மாணவர்கள் ஐந்து பேருக்கு புலமைப்பரிசில்களை அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.உயர் கல்வி புலமைப்பரிசில் திட்டம் – 2013 இன் கீழ் இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த திட்டத்தின் கீழ் பாகிஸ்தானிலுள்ள பிரபல்யமிக்க பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய துறைகளில் உயர் கல்வியை மேற்கொள்ள முடியும். இந்த கற்கைநெறிகளை மேற்கொள்ளும் காலப் பகுதியில் தேவையான அனைத்து நிதி வசதிகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் வழங்குகின்றனது.
இந்த திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரான ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காஷிம் குரேஷி சந்தித்து கலந்துரையாடினார். இதுபோன்றே பொறியியல் மற்றும் மருந்தகம் ஆகிய துறைகளில் இலங்கை மாணவர்கள் உயர் கல்வியை மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் புலமைப்பரிசில் வழங்குகின்றது.
இதற்கு மேலதிகமாக 150 பாடசாலை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம், ஜின்னா புலமைப்பரிசில்களை வருடாந்தம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply