மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
ஆளும் கட்சியின் மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. குறித்த அமைச்சர்கள் தொடர்பான தீர்மானங்கள் ஏற்கனவே எதிர்க்கட்சிகளினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன, உள்ளுராட்சி மன்ற அமைச்சர் எம்.எல்.ஏ.எம். அதாவுல்லாஹ் மற்றும் மின்வலு, எரிசக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பொய்யான தகவல்களை அமைச்சர் அதாவுல்லாஹ் வெளியிட்டு நாடாளுமன்றை பிழையாக வழிநடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
40000 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போது, அரசியல் பின்னணியுடையவர்களுக்குகே நியமனம் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஜோன் செனவிரட்னவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமைச்சருக்கு எதிராக 32 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் முன்னர் பதவி வகித்த அமைச்சரான சம்பிக்க ரணவக்க மீது குற்றச்சாட்டை சுமத்தி நாடாளுமன்றை பிழையாக வழிநடத்தியதாக பவித்ரா வன்னியாரச்சி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் பவித்ராவிற்கு எதிராக 17 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply