சூடான் நாட்டுக்கு தப்ப முயன்ற எகிப்து முன்னாள் பிரதமர் கைது
எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் இடைக்கால அரசில் பிரதமராக இருந்தவர் காண்டில். இவர் பதவியில் இருந்தபோது 1996–ம் ஆண்டில் தனியார் மயமாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை மீண்டும் தேசிய மயமாக்க ஆளுங்கட்சி உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை காண்டில் ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து அவருக்கு எகிப்து கோர்ட்டு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து கெய்ரோ கோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வெளியில் தலை காட்டாமல் தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் காண்டில் சூடான் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றார். இதற்காக தலைநகர் கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலைவனம் வழியாக சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். காண்டில் கைது செய்யப்பட்டதை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply