சிரியா அலெப்போவில் 10-ம் நாள் விமானப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியது

சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு எதிராக சன்னி போராளிக்குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. இதில் போராளிகள் வசமுள்ள இரண்டாவது பெரிய வர்த்தக நகரமான அலெப்போவை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்று அங்கு தீவிர விமானப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.கடந்த 15-ம் தேதி முதல் நடந்துவரும் இந்த தாக்குதலின் ஆரம்பத்தில் பேரல் குண்டுகளை விமானப்படை ஹெலிகாப்டர்கள் வீசின. கிறிஸ்துமஸ் தினமான நேற்று போப் ஆண்டவர், போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவிகள் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் தொடந்து 10-ம் நாளாக நேற்று அலெப்போவின் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன.

இதன் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 117 குழந்தைகள் உள்பட 410 பேர் இறந்துள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் குறறம் சாட்டியுள்ளன. இந்த விமானப்படை தாக்குதலை அரேபிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டித்துள்ளன. அதே நேரத்தில், சிரியாவுடன், ரஷ்யா ஆயில் மற்றும் கேஸ் ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply