புதிய அரசியல் சாசனமொன்றை அமைக்க வேண்டும் : வாசுதேவ நாணயக்கார
புதிய அரசியல் சாசனமொன்றை அமைக்க வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 14ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் சாசனத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமது கட்சி கோர உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய தேர்தல் முறைமையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளது. இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் தமது கட்சிக்கு உடன்பாடு கியைடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களினால் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய வகையிலான பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply