சீனாவில் தேர்தல் மோசடியில் ஈடுபட்ட 56 எம்.எல்.ஏ.க்கள் டிஸ்மிஸ்

சீனாவில் தேர்தல் மோசடியில் ஈடுபட்ட 56 எம்.எல்.ஏ.க்கள் ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டனர். மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சமீபத்தில் சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்தும் பலர் வெற்றி பெற்றது தெரியவந்தது.இதுகுறித்து நடத்திய ஆய்வில் அது உண்மை என தெரிய வந்தது. அதை தொடர்ந்து சீன அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி தேர்தல் முறைகேடு மூலம் வெற்றி பெற்ற 56 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். மேலும் 518 கவுன்சிலர்களை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ‘மக்கள் காங்கிரஸ்’ கட்சியை சேர்ந்தவர்கள் ஓட்டுக்கு ரூ.110 கோடி பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply