ராதீகா உண்மையைக் கண்டறியும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் உண்மையைக் கண்டறியும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் முனைப்பின் ஒர் கட்டமாக இந்த விஜயம் கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளன.தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் ஈழ ஆதரவாளர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு விஜயங்களை மேற்கொள்வார்கள் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து இவ்வாறு யாழ்ப்பாண குடாநாட்டிற்கு விஜயம் செய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ராதீகா சிற்சபேசன் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனேடிய உள்நாட்டு அரசியலாகவே இந்த விஜயத்தை கருத வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியின் சார்பில் அண்மையில் தீபக் ஒபராய் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும், அதற்கு போட்டியாகவே எதிர்க்கட்சியின் சார்பில் ராதீகா சிற்சபேசன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply