பொது வேட்பாளராக சந்திரிகாவை களமிறக்குவது குறித்து தீர்மானமில்லை கூட்டமைப்புடன் பேசுகின்றோம்: ஐ.தே.க.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை பொது வேட்­பா­ள­ராக நிறுத்­து­வது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி தீர்­மா­னிக்­க­வில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவோம் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.எமது செயற்­பா­டு­க­ளுக்கு மக்கள் விடு­தலை முன்­னணி எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்கு நாம் கவ­லைப்­ப­ட­வில்லை. ஜன­நா­ய­கத்தை விரும்­புவோர் எம்­முடன் கைகோர்க்­கலாம் எனவும் அவர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், அடுத்த ஆண்­டுடன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக் ஷ அர­சாங்­கத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைப்­பதே எமது இலக்கு. ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் யாரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தென நாம் தீர்­மா­னிக்­க­வில்லை.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை வேட்­பா­ள­ராக நிறுத்­து­வதா? இல்­லையா? என்­பது தொடர்பில் கட்சி எந்தத் தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை. எமது கட்­சிக்­குள்­ளேயே சிறந்த தலை­வர்கள் இருக்­கின்­றனர். மக்­க­ளினால் ஆத­ரிக்­கப்­பட்டு அதி­க­ள­வி­லான மக்கள் வாக்­கு­களை பெறக்­கூ­டிய சிறந்த தலை­வர்கள் இருக்கும் நிலையில் பொது வேட்­பாளர் தொடர்பில் இன்னும் ஐக்­கிய தேசியக் கட்சி சிந்­திக்­க­வில்லை.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலின் போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வினை எதிர்­பார்க்­கின்றோம். ஜன­நா­யக ரீதி­யி­லான ஆட்­சி­யினை அமைத்து சகல இன மக்­க­ளுக்­கு­மான ஆட்­சி­யினை அமைக்க வேண்­டு­மாயின் அனைத்து இனங்­க­ளையும் பிர­தி­ப­லிக்கும் கட்­சி­களின் ஆத­ரவு அவ­சியம்.

வடக்கு மக்­க­ளுக்கு இருக்கும் ஒரே நம்­பிக்கை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் மட்­டு­மே­யாகும். ஆகவே இவ்­வி­ட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் சுமு­க­மான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ர­வினை பெற்றுக்கொள்வதே சிறந்ததாகும்.
ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி எவ்­வித முடி­வு­களும் இன்­னமும் எடுக்­காத நிலையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கருத்­தினை கண்­டிக்­கின்றோம்.

இன்று மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் வலி­யு­றுத்தி வரு­வதை ஐக்­கிய தேசியக் கட்சி அன்றில் இருந்தே குறிப்­பிட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி அதி­கார முறை­யினை இல்­லா­தொ­ழித்து ஜன­நா­யக ஆட்­சி­யினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதே எமது கொள்கை. எமது ஆட்­சியில் அதை நிச்­ச­ய­மாக நடை­மு­றைப்­ப­டுத்­துவோம்.

அதேபோல் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியின் சர்­வா­தி­கார அடக்கு முறை ஆட்­சியில் இருந்து விடு­பட்டு மக்கள் ஆட்சி வேண்­டு­மென ஆத­ரிக்கும் கட்­சிகள் மட்டும் எம்­முடன் இணை­யுங்கள். யார் எதிர்ப்புத் தெரி­வித்­தாலும் முரண்­பா­டு­க­ளான கருத்­துக்­களை முன்­வைத்­தாலும் மக்கள் எம்­மு­ட­னேயே இருக்­கின்­றனர்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் ஆட்சியில் மக்கள் அதிருப்தி கண்டு விட்டனர். விலையேற்றத்திலும் பொருளாதார சிக்கலிலும் இருந்து விடுபட்டு அமைதியாக வாழவே இன்று மக்கள் முயற்சிக்கின்றனர். எனவே அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாகவே அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply