காங்கோ நாட்டில் தீவிரவாதிகளுடன் ராணுவம் துப்பாக்கி சண்டை: 46 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளன. இதனால் அங்கு அரசியல் ஸ்திரதன்மை இன்றி உள்ளது. வன்முறை தாக்குதல்களால் இதுவரை சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் தாக்குதல்களால் மக்கள் பசி, பட்டினி மற்றும் நோயால் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு ஐ.நா. சபையின் அமைதிப்படையை சேர்ந்த 21 ஆயிரம் பேர் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் இன்ஷாசாவில் நேற்று விமான நிலையம், ராணுவ வீரர்கள் குடியிருப்பு மற்றும் அரசின் ரேடியோ, டெலிவிஷன் நிலையங்களில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அதிபர் ஜோசப் கமிலாவுக்கு எதிராக செயல்படும் கிறிஸ்தவ தலைவர் பால் ஜோஸ் முழுங்குபிலா தலைமையிலான தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.

மேலும் அரசுக்கு சொந்தமான ரேடியோ மற்றும் டெலிவிஷன் நிலையங்களை கைப்பற்றினர். இதனால் காலை 8 மணி முதல் அவை மூடப்பட்டன. அங்கு அதிபருக்கு எதிராக கோஷங்களை முழங்கி கொண்டே இருந்தனர். அங்கு பணியில் இருந்த பல நிருபர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

தகவல் அறிந்ததும் காங்கோ நாட்டு ராணுவத்தின் அதிரடிப்படை அங்கு திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு தீவிரவாதிகளும் தாக்கினர்.

அதில் 46 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்னர். மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே சாத்ஷி ராணுவ முகாம் மற்றும் ராணுவ தலைமை அலுவலகம், ராணுவ வீரர்கள் குடியிருந்த சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களிலும் தீவிரவாதிகளின் மற்றொரு பிரிவு தாக்குதல் நடத்தியது.

விமான நிலயத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஐ.நா. சபை ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.

அனைத்தையும் ராணுவம் முறியடித்தது. மேலும், கடாங்கா மாகாண தலைநகர் லுபும்பாசியில் முகுங்கு பிலியா நடத்தி வரும் கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆயுதங்கள் பதுக்கியிருப்பது தெரியவந்தது.

எனவே, அங்கு புகுந்து ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. பின்னர் அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply