புத்தாண்டு எமது முயற்சிகளுக்கு வெற்றியைத் தர வேண்டும் ஜனாதிபதி புதுவருட வாழ்த்து

பிறந்­தி­ருக்கும் புத்­தாண்டு அபி­வி­ருத்தி தசாப்­தத்தில் மேலும் பல கருத்­திட்­டங்­க­ளுக்­கான வாயில்­களை திறந்­தி­ருக்­கின்­றது. தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பும்­போது நாம் சக­ல­வ­கை­யான வேறு­பா­டு­க­ளையும் பிரி­வி­னை­க­ளையும் ஒதுக்கி­விட வேண்டும். பிறந்­தி­ருக்கும் இப் புத்­தாண்டு தேசத்தின் அபி­லா­ஷை­களை அடைந்­து­கொள்­வற்­கான எமது முயற்­சி­க­ளுக்கு வெற்­றியைத் தர­வேண்டும் என பிரார்த்­திக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். புத்­தாண்டை முன்­னிட்டு விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:அபி­வி­ருத்­திக்­கான ஒரு நீண்ட போராட்­டத்தின் பின்னர் நாட்டை அபி­வி­ருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் பெரு­மை­யுடன் நாம் இப்­புத்­தாண்டைக் கொண்­டா­டு­கின்றோம். மிகுந்த அர்ப்­ப­ணத்­துடன் நாம் அபி­வி­ருத்தித் தசாப்­தத்தில் கால­டி­யெ­டுத்­து­வைத்­துள்ளோம். புதி­தாக, நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள அதி­வேக பாதைகள், விமான நிலை­யங்கள், மின்­சார நிலை­யங்கள், துறை­மு­கங்கள், நெடுஞ்­சா­லைகள் மற்றும் நகர அலங்­காரம் போன்­ற­வற்றின் நன்­மை­களை நீங்கள் ஏற்­க­னவே அனு­ப­வித்து வரு­கின்­றீர்கள். பிறந்­தி­ருக்கும் புத்­தாண்டு அபி­வி­ருத்தித் தசாப்­தத்தில் மேலும் பல கருத்­திட்­டங்­க­ளுக்­கான வாயில்­களைத் திறக்­கின்­றது. இதன்­மூலம் நீங்­களும் உங்­க­ளது பிள்­ளை­களும் எதிர்­கா­லத்தில் இன்னும் பல நன்­மை­களைப் பெற்­றுக்­கொள்­வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் எம்­மீது நம்­பிக்கை வைப்­பீர்கள் என நான் உறு­தி­யாக நம்­பு­கிறேன்.

பிறந்­தி­ருக்கும் இப்­புத்­தாண்டு பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யிலும் அர­சி­யல்­து­றை­யிலும் மிகவும் குறிப்­பி­டத்­தக்க ஒரு ஆண்­டாகும். தேசிய ஐக்­கியம், சமா­தானம், மன­நி­றைவு ஆகி­ய­வற்றைப் பேணிய நிலை­யி­லேயே நாம் இத்­தி­சையில் முன்­னோக்கிச் செல்­கிறோம். எமது நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் உண்­மை­யான தேசிய முன்­னேற்­றத்­திற்கும் இதுவே சரி­யான பாதை என்­பதை நாம் அடை­யாளம் கண்­டுள்ளோம்.

தேசத்­தினைக் கட்­டி­யெ­ழுப்­பு­கின்ற போது நாம் எல்லா வகை­யான வேறு­பா­டு­க­ளையும் பிரி­வி­னை­க­ளையும் ஒதுக்­கி­விட வேண்டும். இதன் விளை­வா­கவே ஒரு புதிய அர­சியல் மற்றும் அபி­வி­ருத்திக் கலா­சாரம் ஏற்­படும். இதனை மேலும் உறு­திப்­ப­டுத்­திய நிலை­யி­லேயே நாம் இப்­புத்­தாண்டில் முன்­னேறிச் செல்ல வேண்டும்.எமது மக்­க­ளுக்கு சுதந்­தி­ரத்­தையும் சமா­தா­னத்­தையும் பெற்­றுக்­கொ­டுத்த நாம் அவர்­க­ளுக்கு அபி­வி­ருத்­தி­யையும் மகிழ்ச்­சி­யையும் பெற்­று­கொ­டுக்க அர்ப்­ப­ணத்­துடன் உள்ளோம்.

பிறந்­தி­ருக்கும் இப்­புத்­தாண்டு தேசத்தின் அபி­லா­ஷை­களை அடைந்து கொள்­வ­தற்­கான எமது முயற்­சி­க­ளுக்கு வெற்­றியைத் தர­வேண்டும் என நான் பிரார்த்­திக்­கின்றேன். உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply