கொரிய தீபகற்பத்தில் போர் உருவானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கமுடியாது: வடகொரிய அதிபர் மிரட்டல்
கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவானால் அங்கு அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் அமெரிக்கா எவ்விதத்திலும் பாதுகாப்பாக இருக்கமுடியாது என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.புத்தாண்டையொட்டி அந்நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தாங்கள் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அதன் மூலம் வீரர்களுக்கிடையேயான சிறு மோதல்கூட போருக்கு வழிவகுக்கும் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதிக்காக தாம் யாரிடமும் கெஞ்சப் போவதில்லை, எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவே அணு ஆயுதங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது மாமாவான ஜாங் சாங் தேக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றபட்டது பற்றி கூறும்போது அவர் மிகவும் அழுக்கான நபர் என்றார்.
தேக் குறித்த விமர்சனங்களை தற்போதுதான் முதல் முறையாக கிம் வெளிப்படையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply