ஈராக்கில் 2 நகரங்களை கைப்பற்றிய தீவிரவாதிகள்

ஈராக்கில் அதிபராக இருந்த சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ன. இந்த நிலையில் சன்னி பரிவினர் அதிகம் வாழும் பல்லூஜா மற்றும் அன்பர் மாகாண தலைநகர் ரமாடி ஆகிய நகரங்களின் பெரும்பகுதியை ‘லிவான்ந்த்’ என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.இவர்கள் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் தவிர நகரங்களின் மீதி பகுதிகளை மலைவாழ் இன மக்கள் பிடித்துள்ளனர்.

இந்த தகவலை ஈராக் உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த 2 நகரங்களையும் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ராணுவம் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெறுகிறது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ரமாடியில் கனரக ஆயுதங்களுடன் ராணுவ வாகனங்கள் வலம் வருகின்றன.

‘லிவான்ந்த்’ தீவிரவாதிகள் கருப்பு கொடி ஏந்தி பக்தி பாடல்களை பாடியபடி செல்கின்றனர். ரமாடியில் 4 போலீஸ் நிலையங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

பல்லூஜா நகரில் பல போலீஸ் நிலையங்களில் போலீசார் இல்லை. அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அங்கு போலீஸ் நிலையங்களை தீவிரவாதிகள் தீ வைத்து எரித்தனர். அங்கிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடித்தனர். 100 கைதிகளை விடுவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply