ஈராக்கின் பலுஜா நகரம் அல்கொய்தாவிடம் வீழ்ந்தது: ராணுவத்தினர் விரட்டியடிப்பு

ஈராக்கின் மேற்கு பகுதியின் முக்கிய நகரமாக பலுஜா நகரம் விளங்குகிறது. இங்குள்ள ரமாடி நகரில் கடந்த திங்கட்கிழமையன்று சன்னி அரேபியர்கள் முகாமிட்டு போராட்ட நடத்தினர். சன்னி பிரிவு மக்களை ஷியா பிரிவு பிரதமர் நூரி அல் மாலிக்கின் அரசு ஒடுக்குவதாக கூறி இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்போது ராணுவத்தினர் அடித்து விரட்டினர்.இதையடுத்து பலுஜா நகரிலுள்ள பழங்குடியின மக்கள் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்துகொண்டு ராணுவத்தினருடன் கடுமையாக சண்டையிட்டனர். இதில் ஈராக்கிய துருப்புகள் பலுஜா நகரைவிட்டு விரட்டப்பட்டனர். பின்னர், பலுஜா நகரம் அல்கொய்தா தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

அன்பர் மாகாண பகுதியில் இருந்து எங்கள் மக்களை காப்பாற்றுகிறவரை அரசுப் படையினர் அங்கிருந்து திரும்ப மாட்டார்கள் என்று பிரதமர் மாலிக்கி தொலைக்காட்சி செய்தியில் கூறியுள்ளார்.

ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு ஆயுதமேந்தியவர்களின் தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதில் கடந்த ஆண்டு மட்டும் பொதுமக்கள் 7,818 பேரும், பாதுகாப்பு படையினர் 1,050 பேரும் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply