யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியிருந்தால் இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் :பா.சிதம்பரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவில்லை என மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக து, யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா பிரபாகரனிடம் கோரியதாகவும் அதற்கு பிரபாகரன் இணங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியிருந்தால் இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தை நிறுத்த முயற்சி எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பிடிவாதத்துடன் செயற்பட்டதாகவும், யுத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதி பூண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய மத்திய அரசாங்கம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். எனினும், தமிழக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தத் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான திகதிகள் இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் கொலை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது எனவும், கருத்து வெளியிடும் நபர்களிடமே அது பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்குத் தீர்ப்பு தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால் மீள விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மரண தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply