போர்க்குற்ற விவகாரங்களை கையாளும் அமெரிக்க அதிகாரி இன்று இலங்கை வருகிறார்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் இன்று (06) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று தொடக்கம் எதிர்வரும் 11ம் திகதி வரையான காலப் பகுதியில் ஸ்டீபன் ஜே ராப் இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.இந்தப் பயணத்தின் போது அவர், இலங்கை அரசாங்க அதிகாரிகளையும், அரசியல் கட்சிகளினதும் சிவில் அமைப்புகளினதும் தலைவர்களையும் சந்தித்து இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்க முயற்சிகள் குறித்து பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விவகாரங்களைக் கையாள்வதற்கான தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
இதற்கு முன்னர் அவர், 2012 மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா முன்வைப்பதற்கு முன்னர், கடந்த 2012 பெப்ரவரி மாதம், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
எதிர்வரும் மார்ச் 3ம் திகதி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஸ்டீபன் ஜே ராப் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply