அமெரிக்க இராஜாங்க திணைக்கள தூதுவர் புதனன்று யாழ் விஜயம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் தூதுவர் ஸ்டீபன் ஜே. ராப் நேற்றுக் காலை கொழும்பு வந்தடைந்தார். ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் இவரது முக்கிய சந்திப்புகள் மற்றும் வடக்கு விஜயம் ஆகியவற்றுக்கான ஒழுங்குகளை வெளிவிவகார அமைச்சு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மேற்படி அமெரிக்கத் தூதுவருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே. ராப் இன்று சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோவை சந்தித்து பேச்சு நடத்துவாரென வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
புதன்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள இவர் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, முதலமைச்சர் விக்கினேஸ்வரன், வட மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனல் உதய பெரேரா ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இதேவேளை வியாழக்கிழமையற்று இராணுவம் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரிகளையும் வெள்ளிக்கிழமையன்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமையும் சனிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸினையும் இவர் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவாரெனவும் அமைச்சு வட்டாரங்கள் கூறின.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply