நாட்டின் சட்டம் ஒழுங்கு பாரியளவில் சீர்குலைந்துள்ளது : ஜே.வி.பி.

நாட்டின் சட்டம் ஒழுங்கு பாரியளவில் சீர்குலைந்துள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் பாரியளவிலான குற்றச் செயல்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஜே.வி.பிதெரிவித்துள்ளது. இரத்தினபுரி காவஹத்தை கொலைகள், கொடகதென கொலைகள், கொள்கலனில் ஹெரோயின் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.கொடகதென பிரதேசத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் இணைப்புச் செயலாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குறித்த இணைப்புச் செயலாளர் பிரதேசத்தில் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், குறித்த இணைப்புச் செயலாளர் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

அண்மையில் பாரியளவில் போதைப் பொருள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் பிரதமருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கட்சி குறிப்பிட்டுள்ளது. பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு மரண தண்டனை அனுபவித்து வந்த சில அரசியல்வாதிகளின் அடியாட்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் இவ்வாறு மன்னிக்கப்பட்டுள்ளனர் என குறி;ப்பிட்டுள்ளது. அமைச்சர் திஸாநாயக்க உச்ச நீதிமன்றின் தீர்ப்பை  உதாசீனம் செய்து தமது ஆதரவாளர்களை நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக விடுதலை செய்து கொண்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply