போர்க்குற்ற விசாரணைகோரும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரும்

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுயாதீனப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வழி செய்யும் ஒரு தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் தமது நாடு கொண்டுவரும் என்று போர்க் குற்றங்களுக்கான அமெரிக்க தூதர் ஸ்டிபன் ஜெ ராப் தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இரு தரப்பும் போர்க் குற்றங்களைச் செய்ததாக ஐ நா பொதுச் செயலருக்கு ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு கூறியிருந்தது. போர்க் குற்றங்கள் குறித்து பிரிட்டனில் இருந்து இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சி சில வீடியோ படங்களை வெளியிட்டது. இவற்றின் உண்மைத் தன்மையை குறித்து ஐ நாவின் நிபுணர்களும் பிற சர்வதேச நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசோ இந்த வீடியோக்கள் ஜோடிக்கப்பட்டவை என்று கூறிவருகிறது.

இலங்கை அரசு போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று பல நாடுகள் கூறியும் இலங்கை அரசு அதை புறக்கணித்து வந்துள்ளது.

போர்க் குற்றங்களை யார் செய்தார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.
போர்குற்றங்கள்

போரின் போது இலங்கைப் படையினர், மக்கள் செரிந்து வாழ்ந்த பகுதிகளில் தாக்கியதாகவும், தாக்குதலற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தியது, கனரக ஆயுதங்களை பயன்படுத்தியது, மருத்துவமனைகளைத் தாக்கியது போன்ற குற்றங்களை போரின் போது செய்ததாக குற்றம்சாட்டுகிறார் சுமந்திரன்.

இது தவிர சரணடைந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணமல் போயுள்ளனர் . இப்போது மன்னாரில் மனித எலும்புக் கூடுகள் எடுக்கப்படுகின்றன. இவைகளின் உண்மைத் தன்மை விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவு தேவை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply