தேரர்களின் இரத்தம் சிந்தப்பட்டமைக்கு பிரதமரே பொறுப்பாகும் : ஜாதிக ஹெல உறுமய
பௌத்த குருமாரை விமர்சித்த பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சிஹல ராவய அமைப்பு நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான பாவச்செயலுக்கு பிரதமரான டி.எம்.ஜயரத்னவே பொறுப்பேற்க வேண்டுமென குற்றம்சாட்டும் ஜாதிக ஹெல உறுமய போதைவஸ்துக்கு எதிரான போராட்டத்தை எவருக்கும் அடிபணியாமல் தொடர்ந்தும் முன்னெடுக்குமென்றும் தெரிவித்தது.இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் தெரிவிக்கையில், பாரியளவிலான போதைவஸ்துக் கொள்கலன் தொடர்பாகவும் அதன் பின்னணி தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்ட ஒமல்பே சோபிததேரர் உட்பட பௌத்த குருமாரை பிரதமர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
பௌத்த சாசன அமைச்சராகப் பதவி வகிக்கும் பிரதமரின் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (நேற்று) சிஹல ராவய பௌத்த குருமார் பிரதமர் வகிக்கும் பௌத்த சாசன அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து எவராவது அதிகாரியொருவரை அனுப்பி என்ன ஏது வென்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வினவாது, பொலிஸாரை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு பௌத்த குருமாரின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது.
இப்பாவச் செயலுக்கான முழுப்பொறுப்பையும் பிரதமரே ஏற்க வேண்டும்.
இந்தத் தாக்குதலை கண்டிப்பதோடு போதைவஸ்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply