பாதுகாப்பு செயலாளர் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமான சேவைகளை ஆரம்பித்து வைத்தார்
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொருட்டு நேற்று வடபகுதிக்கு விஜயம் செய்தார். நீண்டகால தேவைப்பாடுடையதாக இருந்த சிறுவர்களுக்கான இணக்கப்பாட்டு நிலையத்தை கிளிநொச்சியில் செயலாளர் திறந்து வைத்தார்.இந்நிலையமானது சிறுவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகவுள்ளது. இந்நிலைய நிர்மாணப்பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விஜயத்தின் போது மிருசுவில் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள 52 ஆம் படைப்பிரிவின் புதிய தலைமையகத்தையும் செயலாளர் திறந்து வைத்தார். இப்படைப்பிரிவின் தலைமையகமானது ரிவிரெச நடவடிக்கையையடுத்து கடந்த காலங்களில் வரனியில் அமையப்பெற்றிருந்தது.
மேலும் 51 ஆம் படைப்பிரிவின் 513 ஆம் படையணித் தலைமையகத்தையும் திறந்ததுவைத்ததுடன் பலாலி இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியையும் நேற்றய விஜயத்தின்போது (ஜன.08) செயலாளர் திறந்து வைத்தார். இக்கட்டடத் தொகுதியானது மருத்துவ ஆய்வு கூடம் அடங்கலான சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதுப்பிக்கப்பட்ட கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் அங்குள்ள நோயாளிகளதும் மருத்துவ அதிகாரிகளதும் நலன்களை விசாரித்தறிந்து கொண்டார். கிளிநொச்சியில் ‘நெலும் பியச’ திரையரங்கு மற்றும் யாழ்ப்பாணத்தில் ’தல்செவன’ விடுமுறை விடுதியையும் இதன்போது செயலாளர் திறந்து வைத்தார்
ஆணையிரவில் தீவிர வாதிகளுடனான யுத்தத்தின் போது தனது படை முகாமையும் சக இராணுவத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு தனது உயிரை தியாகம் செய்த ‘ஹசலக வீரர்’ காமினி குலரத்னவின் சிலையையும் சென்று பார்வையிட்டார்.
இவ் விஜயத்தின்போது இராணுவத்தினரின் சேம நலன்களை விசாரித்ததுடன் அவர்களது தேவைப்பாடுகளை அறியும் பொருட்டு நேரடியாக இராணுவத்தினருடன் சம்பாசனையிலும் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீ.ஏ சந்திரசிறி, யாழ்ப்பாணத்துக்கான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க,கிளிநொச்சி பிரதேச இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply