சிரிய ஹொம்ஸ் நகரில் உக்கிர மோதல் கிளர்ச்சியாளர்கள் பலர் உயிரிழப்பு
சிரிய ஹொம்ஸ் நகரில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிக்குள் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவ முயற்சித்தபோது இடம்பெற்ற மோதலில் பெருந்தொகையான கிளர்ச்சியாளர்கள் அரசாங்கப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தத் தாக்குதலிலும் ஏனைய தாக்குதல் நடவடிக்கைகளிலும் 37 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்திற்கு சொந்தமான செய்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.அதேசமயம் பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் விபரிக்கையில், இந்த மோதல் சம்பவத்தில் குறைந்தது 45 கிளர்ச்சியாளர்கள் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரால் இதுவரை குறைந்தது 100000 பேர் பலியாகியுள்ளனர்.
ஹொம்ஸ் நகரிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் இராணுவத்தினரால் ஒரு வருடத்துக்கு முன் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்தப் பிரதேசங்களை மீளக் கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முயற்சித்த வேளையிலேயே மோதல் இடம் பெற்றுள்ளது.
அந்தப் பிரதேங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற முடியாது சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
மேற்படி பிரதேங்களில் கடும் உணவு மற்றும் சக்தி வளப்பற்றாக்குறை நிலவுவதால் அங்கு சிக்கியுள்ள மக்கள் கடும் பட்டினியை எதிர்கொண்டுள்ளதாக சிரிய செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.
மேலும், சிரியாவின் ஹமா மாகாணத்திலுள்ள கபாத் நகரில் வியாழக்கிழமை இடம் பெற்ற கார் குண்டுத் தாக்குதலொன்றில் குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஷெய்க் மெக்சுத் பிராந்தியத்தில் அரசாங்க போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply