இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ரங்கசாமி
புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கான மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. புதுவை சட்டசபையில் உள்ள முதல்–அமைச்சர் அலுவலகத்தில் நிவாரணம் வழங்கும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபாநாயகர் முன்னிலை வகித்தார். முதல்–அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மீனவர்களுக்கான இலவச துணிகளை வழங்கினார்.பின்னர் முதல்–அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் புதுவை மீனவர்களையும் சேர்க்க கோரி பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு முதல்–அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply