ஓய்ந்து போன புலிகளின் குரல் !
கடந்த ஐந்து நாட்களாக புலிகளின் குரல் வானொலி தனது வழமையான பண்பலை(FM) ஒலிபரப்புகளை செய்ய முடியாது போய்யுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் இருந்து பண்பலையூடாக ஒலிபரப்பாகும் புலிகளின் குரல் வானொலியின் செய்திகளை வழமையாக அதன் இணையத்தளத்தில் அன்றன்றே தரவேற்றி பதிவு செய்து வருவார்கள். கடந்து மாதம் பெப்ரவரி 25ம் திகதிக்கு பின் புலிகளின் குரல் இணையத்தளத்தில் செய்திகள் எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனை புலிகளின் குரல் இணையத்தளத்தில் அவதானிக்கக் கூடியாதாக உள்ளது.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நவம்பர் 21, 1990 இல் புலிகளின் குரல் வானொலியை தொடக்கி வைத்ததாக புலிகளின் ஊடகங்களில் சொல்லப்படுவதுண்டு. ஆரம்ப காலம் தொடக்கம் இவ் வானொலியை புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான தமிழன்பன் (ஜவான்) பொறுப்பாளராக இருந்து நடாத்தி வந்துள்ளார்.
கடந்த வாரம் புலிகளின் முக்கிய செய்மதித் தொடர்பாடல் நிலையமொன்றை புதுக்குடியிருப்புப் பகுதியில் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply