புலிசார்பு மதகுருமாரை சந்தித்த ஸ்டீபன் ரப் ஒபாமாவிற்கு கீதாஞ்சலி கடிதம்

புலிப் பிரிவினைவாதிகளின் இணக் கப்பாட்டுடன் இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு, போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆராயும் அமெரிக்க பிரதிநிதி ஸ்ரீபன் ரெப் செயற்படுகின்றமை கேவலமான செயல் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். புலி ஆதரவுள்ள மதத் தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும் சார்ந்தோரையும் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ரப் தயாரித்துள்ள அறிக்கைகளை அவர்களைக் கொண்டே அதனை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. புலிகள் உபயோகித்த ஆயுதங்களையும் இலங்கை இராணுவம் தான் உபயோகித்தது என்றும் குற்றம் சாட்டியிருப்பது ஒரு கேவலமாகும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவரை காலமும் இராணுவம் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்று 2003ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவிலிருந்து வெளிவரும் ஒரு செய்திப் பத்திரிகையில் வெளிவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது நானும் எனது உறவினர்களையும் சொந்த பந்தங்களை இழந்துள்ளேன் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply