விசா மோசடி வழக்கை ரத்து செய்ய கோரி அமெரிக்க கோர்ட்டில் தேவயானி வழக்கு

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே (39) ‘விசா’ மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், தேவயானிக்கு தூதரக ரீதியிலான சிறப்பு சலுகைகளும், விலக்கு உரிமைகளும் வழங்கப்பட்டது. அதனால் எரிச்சல் அடைந்த அமெரிக்கா அவற்றை திரும்ப பெறுமாறு இந்தியாவை வலியுறுத்தியது. ஆனால் முடியாது என இந்தியா மறுத்து விட்டது,எனவே நியூயார்க் கோர்ட்டில் தேவயானி ஆஜர் ஆகாத நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை நாட்டை விட்டு அமெரிக்கா வெளியேற்றியது. இதை யடுத்து நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தேவயானி நாடு திரும்பினார்.

இருந்தாலும் தேவயானி விதிவிலக்கு உரிமையை இழந்து விட்டதால் விசா மற்றும் குடியுரிமை நடை முறைகளில் தேடப்படும் நபராக குறிக்கப்படுவார். அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதைதத்தொடர்ந்து தன் மீதான விசா மோசடி வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்க பெடரல் கோர்ட்டில் தேவயானி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவரது சார்பில் வக்கீல் டேனியல் அர்ஷாக் 4 பக்க மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அதில் தேவயானி ஐ.நா.வுக்கான இந்திய தூதர் என அறிவிக்கப்பட்டார். அதை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டது.

இருந்தும் எதிர்பாராத விதமாக உடனடியாக அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு முன் ஐ.நா. தூதர் ஆக நியமிக்கப்பட்ட அவர் அதன் மூலம் இந்த வழக்கில் இருந்து முழு விதிவிலக்கு பெற்று விட்டார்.

எனவே, அவர் மீது மேலும் வழக்கு விசாரணை அல்லது பிடிவாரண்டு உள்ளிட்ட மேல் நடவடிக்கைகள் தேவை இல்லை.

வியன்னா உடன்படிக்கையின் 31–வது பிரிவின்படி தூதர் அந்தஸ்து பெற்றவர் வழக்கு விசாரணையில் இருந்து விதிவிலக்கு பெறுகிறார். இதை கருத்தில் கொண்டு தேவயானி மீதான கிரிமினல் நடவடிக்கைகளை அமெரிக்கா கைவிட வேண்டும். மேலும் அவர் மீதான ’விசா’ மோசடி வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply