பிலிப்பைன்சில் இந்திய தொழில் அதிபர் சுட்டுக்கொலை
இந்தியாவை சேர்ந்த நவ்ஜோத் சிங் (வயது 26) என்பவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள நாகா சிட்டியில் தங்கி தொழில் செய்து வந்தார். இவர் தனது உதவியாளர் லக்விந்தர் சிங் மற்றும் பரம்ஜித் சிங்குடன் அங்குள்ள கிராமப்பகுதியான கலாபங்கா பகுதியில் உள்ள தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனை வசூலித்துக்கொண்டு இருந்தார்.அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், நவ்ஜோத் சிங்கை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினார். இதில் லக்விந்தர் சிங்குக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு நவ்ஜோத் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பிலிப்பைன்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply