பொன்சேகா, ஜேவிபியினர் வருவார்களானால் யானை சின்னத்தை கைவிடத் தயார்: ரணில்
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில், எதிர்கட்சி வரிசையில் இருக்கின்ற பிரபல கட்சிகளான சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, ஜேவிபி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிடலாம். இதற்காக யானை சின்னத்தை கைவிட்டு பொது சின்னத்தை ஏற்றுக் கொள்ள நாம் தயார். ஆனால், சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்த யோசனைக்கு இதுவரையில் உடன்படுவதாக தெரியவில்லை. இந்த கட்சிகளும் நம்முடன்
கூட்டிணைவார்களாயின், நாம் ஒன்று சேர்ந்து இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கலாம். நீங்கள் இந்த கட்சிகளுடன் இதுபற்றி உரையாட வேண்டும். இது நடக்குமானால் 2010ஆம் வருட ஜனாதிபதி தேர்தல் காலத்தை காலத்தையொட்டிய எதிரணி கூட்டணியை ஏற்படுத்தலாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசனும், ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று முற்பகல் சந்தித்து எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடினர். கொழும்பு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பு, இரு கட்சி தலைவர்களுக்கு இடையில் மாத்திரம் இடம்பெற்றது.
இதன்போது, தமது கட்சி இத்தேர்தலில் மேல்மாகாணத்தில் தனித்து ஏணி சின்னத்தில் போட்டியிட செய்துள்ள முடிவு தொடர்பாக மனோ கணேசன், ரணில் விகரமசிங்கவுக்கு நேரடியாக விளக்கி கூறினார். தமது கட்சிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் இருக்கின்ற பாரம்பரிய உறவு தொடர்ந்து இருக்கும் என்றும், ஆனால், எதிர்வரும் தேர்தலில் பொது எதிரணி உருவாகாதபட்சத்தில், தனித்து போட்டியிடுவதை தவிர தமக்கு வேறு வழியில்லை எனவும் மனோ கணேசன், ரணில் விக்கரமசிங்கவுக்கு எடுத்து கூறினார்.
ஜனநாயக மக்கள் முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதையே தாம் விரும்புவதாகவும், இந்த தேர்தலிலும் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதை தான் பெரிதும் விரும்புவதாகவும், அதன் மூலமாகவே இந்த அரசாங்கத்தை விரட்ட முடியும் என்றும் ரணில், மனோவிடம் கூறினார். அத்துடன்
பொது எதிரணிக்கு தாம் தயார் என்றும், ஜனநாயக கட்சி, ஜேவிபி, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது சின்னத்தில் போட்டியிட முடியும் என்றும், அதற்கான அரசியல் சூழல் உருவாக்கப்பட எதிர்வரும் தினங்களில் உழைக்குமாறும் ரணில் மனோவிடம் கேட்டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply