மேல் மற்றும் தெற்கு மாகாணங்கள் கலைக்கப்பட்டுள்ளன

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சிகள் தேர்தலுக்கு முகங்கொடுக்க தயார் என தெரிவித்துள்ளன.இது தொடர்பில் பிரதான கட்சிகளிடம் எமது செய்தி பிரிவு வினவியது.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே வி பி ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தன.ஜே வி பியின் தயார் நிலை குறித்து கட்சியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு குறிப்பிடடார்.

எமக்கு தெரியும் அரசாங்கம் இந்த இரண்டு மாகாணங்களையும் விரைவில் கலைக்கும் என்று நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவு செய்துள்ளோம் என குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க தமது கட்சியின் தயார் நிலை தொடர்பில் கருத்து  தெரிவித்தார்.

நாங்கள் வேட்பாளர்களுக்கான தெரிவை ஆரம்பித்துள்ளோம். வேட்;பு மணு தாக்கலின் பின்னரே வெளிட எதிர்பார்த்துள்ளோம். இந்த தேர்தலில் வெற்றிப்பெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என குறிப்பிட்டார்.

கலைக்கப்பட்டுள்ள இரு மாகாண சபைகளில் தமது கட்சி போட்டியிடும் தயார் நிலை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்பொருட்டான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளன. இரண்டு வாரங்கள் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் எமது வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்படும் என குறிப்பிடார்.

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளமையை உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்த பின்னர், அவர் ஒரு வார காலப்பகுதிக்கு இந்த மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்களை கோருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply