சமாதானம், நல்லிணக்கத்திற்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பம் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தியில் : ஜனாதிபதி

தைப்பொங்கல் பண்டிகை மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையிலான பலமான பிணைப்பை ஏற்படுத்துவதுடன் நாளாந்த வாழ்விலும் தெய்வ வழிபாட்டிலும் மக்களினதும் சமூகங்களினதும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது. இது எமது நாட்டில் சமாதானத்திற்காகவும் மக்கள் மத்தியிலான நல்லிணக்கத்திற்காகவும் நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாழ்த்து செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தை மாதத்தின் முதல் நாளாகக் குறித்து நிற்கும் இவ்விசேட பண்டிகையான தைப்பொங்கல் சிறந்த அறுவடையைத் தந்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு விசேட பண்டிகையாகும். பொங்கலானது சூரிய பகவானின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையில் புதிய சந்தர்ப்பங்களுக்கான ஆரம்பமாகக் கருதப்படுவதுடன் அறுவடையின் முதற்பகுதி சூரிய பகவானுக்கு படையல் செய்யப்படும்போது இது சூரிய மங்கலமாகவும் குறிப்பிடப்படுகிறது.

இப்பண்டிகை சிறந்த அறுவடைக்காக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதில் எதிர்வரும் வருடத்திலும் சிறந்த அறுவடையும் வெற்றிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலும் மிகுந்த அன்பு மற்றும் புரிந்துணர்வுடன் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றிணைக்கின்றது. இப்பண்டிகையின் இரண்டாவது நான் கால்நடைகளுக்கு கௌரவம் அளிக்கும் ஒரு விசேட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகை மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையே பலமான பிணைப்பை ஏற்படுத்துவதுடன் நாளாந்த வாழ்விலும் தெய்வ வழிபாட்டிலும் மக்களினதும் சமூகங்களினதும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது. இது எமது நாட்டில் சமாதானத்திற்காகவும் மக்கள் மத்தியிலான நல்லிணக்கத்திற்காகவும் நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாகும். இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply