அமெரிக்க தூதர்களின் துணைவியர்களை இந்திய அரசு கண்காணிக்க ஆரம்பித்துள்ளது

இந்திய அரசின் தூதரக அதிகாரியாக அமெரிக்காவில் பணியாற்றியவர் தேவயானி கோப்ரகடே. இவர் தனது பணிப்பெண்ணுக்கு ஊதியம் குறைவாக கொடுத்ததாக கூறி கைது செய்யப்பட்ட அத்து மீறல் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இல்லை. இதனால் தற்போது அமெரிக்க அரசுக்கு மேலும் சில கெடுபிடிகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.ஏற்கனவே அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய நுழைவு சலுகையை ரத்து செய்த இந்தியா, தற்போது அந்நாட்டு தூதர்களின் துணைவியர்கள் டெல்லி, மும்பை மற்றும் சென்னையிலுள்ள அமெரிக்க பள்ளியில் பணிசெய்யும் விவரங்களை வழங்குமாறு கேட்டுள்ளது. ஆனால் இதுவரை இத்தகவலை அந்நாட்டு அரசு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளிகளில் பணியாற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகைகளை ரத்து செய்யும் முடிவு காரணமாகவே இவ்விவரம் கேட்கப்படுவதாக அமெரிக்காவிலுள்ள இந்திய தூதர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு துறை செயலாளரான வில்லியம் பர்ன்சிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply