இலங்கைச் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும் இன்று முதல் விடுவிக்கப்படுவர்

இலங்கைச் சிறை­க­ளி­லுள்ள இந்­திய மீன­வர்கள் அனை­வரும், அவர்­க­ளது பட­கு­களும் இன்று வியா­ழக்­கி­ழமை தொடங்கி உட­ன­டி­யாக விடு­விக்­கப்­படும் என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன  உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.இரு­நாட்டு மீன­வர்­களும் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் குறித்து விவா­திப்­ப­தற்­காக இந்­தியா சென்­றுள்ள இலங்கை அமைச்சர், நேற்று புதன்கிழமை இந்­திய வெளி­யு­றவு மற்றும் விவ­சாய அமைச்­சர்­களை சந்­தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.சென்­னையில் இந்த மாதம் 20 ஆம் தேதி இரு­நாட்டு மீன­வர்­க­ளி­டையே நடை­பெ­ற­வுள்ள பேச்­சு­வார்த்­தை­களில் இலங்கை மீன­வர்கள் கலந்து கொள்­வார்கள் என்­ப­தையும் அவர் உறு­திப்­ப­டுத்­தினார்.

இந்த பய­ணத்­துக்கு வட மாகாண கடற்­தொ­ழி­லா­ளர்கள் இணையம் மற்றும் தேசிய மீன­வர்கள் ஒத்­து­ழைப்பு இயக்கம் ஆகி­யவை தெரி­வித்­துள்ள எதிர்ப்பை அவர் நிரா­க­ரித்தார்.
இரு­நாட்டு மீன­வர்கள் சந்­திக்கும் பிரச்­சி­னைகள், இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான கடல் வளத்தை மேம்­ப­டு­த்துவது, சுற்­றுச்­சூழல் பாது­காப்பு ஆகி­யவை குறித்து விவா­திப்­ப­தற்கு ஒரு குழு அமைக்­கப்­படும் என்றும், இது குறித்து ஆராய ஒரு நிதியத்தை ஏற்படுத்த இந்தியா முழுமையாக பண உதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அவர்தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply