பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா திரட்டிய சாட்சியங்களைத் தம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் திரட்டிய தகவல்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்கத் தூதரக பேச்சாளர் ஜுலியானா ஏ ஸ்பவன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதிலும் உள்ள பலதரப்பட்டவர்களுடனும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பரந்துபட்டளவில் தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொள்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply