சம்பந்தன் காலத்திலேயே தீர்வு வேண்டும் பிளவு தமிழருக்கு ஆரோக்கியமானதல்ல : இ.தொ.கா.

வடக்கில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக ஓர் அமைப்பு உரு­வா­வது பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவை இலக்கு வைத்தே ஆகும். எனவே பிளவு என்ற அபா­யத்­துக்கு இடம் கொடுக்­காது சம்­பந்தன் காலத்­தி­லேயே தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வினைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு முயல வேண்டும். மாறாக பிள­வுகள் ஏற்­ப­டு­மானால் அது தமி­ழ­ருக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தாக அமை­யாது என்று இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸின் ஆலோ­ச­கரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரி.வி. சென்னன் தெரி­வித்தார்.பதுளை பணி­ம­னையில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் பேசு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். சென்னன் இங்கு தொடர்ந்து பேசு­கையில்,

தமிழ் மக்­க­ளுக்­கான மேம்­பா­டுகள் சர்­வ­தேசம் மூல­மா­கத்தான் பெற்றுக் கொடுக்க முடி­யு­மென்ற நிலைப்­பாட்டில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இருந்து வரு­கின்­றது. தற்­போ­தைய அர­சையோ ஜனா­தி­ப­தி­யையோ நம்ப முடி­யா­தென்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கூறி வரு­கின்­றது. பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு விட­யத்­திலும் அக்­க­றை­யற்ற நிலை­யி­னையே கூட்­ட­மைப்பு கொண்­டி­ருக்­கின்­றது.

தமிழ் மக்கள் மீது கூட்­ட­மைப்­பிற்கு கருணை இருக்­கு­மே­யாகில் ஜனா­தி­ப­தியின் கரங்­க­ளைப்­பற்றி அவ­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொ­ளண்டு தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வினைப் பெற்றுக் கொடுக்­கலாம். அதை­வி­டுத்து சர்­வ­தே­சமே எம்­மக்­க­ளுக்கு தீர்­வினைப் பெற்றுக் கொடுக்க வேண்­டு­மென்று ஒப்­பாரி வைத்துக் கொண்­டி­ருப்­பதில் பயன் ஏதும் கிடைத்து விடப்­போ­வ­தில்லை.

நாடும் ஏடும் போற்றும் வகையில் பெற்­றி­ருந்த அபார வெற்­றியை தமிழன் என்ற ரீதியில் நாம் பாராட்­டு­கின்றோம். ஆனால் அன்­றி­ருந்த ஒற்­றுமை ஐக்­கியம் தற்­போது சிதைந்து கொண்டு போவதைப் பார்க்கும் போது தலை குனிய வேண்­டி­யுள்­ளது.
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீத­ர­னுக்கும் வட மாகாண முத­ல­மைச்­ச­ருக்­கு­மி­டையே இருந்து வரும் நீர்ப்­பிர்ச்­சினை, அத்­துடன் வட மாகா­ணத்தில் உரு­வாக்­கப்­பட்டு வரும் பிறி­தொரு தமிழ் கூட்­ட­மைப்பு மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரி­டையே இருந்து வரும் பனிப்போர் இத்­த­கைய நிலைகள் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­லி­ருந்த ஒற்­றுமை ஐக்­கியம் சிதைந்து பிளவு ஏற்படும் அபாயம் எதிர்நோக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் காலத்­தி­லேயே தமிழர் பிரச்­சி­னைகள் அனைத்தும் தீர்க்­கப்­பட்டு விடல் வேண்டும். தவறின் தமிழர் பிரச்­சி­னைகள் தொடர் கதை­யா­கவே தான் இருக்கும். ஆகவே சம்­பந்தன் உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்கள் ஒன்­று­கூடி ஏற்­ப­டப்­போகும் பிள­வினை தடுத்து நிறுத்த வேண்டும். பிரிந்­த­வர்­களை ஒன்­றி­ணைக்கும் விவே­கத்தை முன்­னெ­டுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் இணை­வ­தற்கே புதிய தமிழ் கூட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­தென்­ப­தையும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உணர வேண்டும். ஆகை­யினால் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தியின் நேசக்­க­ரங்­களைப் பற்றி பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு முதலில் சென்று பார்க்க வேண்டும். அதன் பிறகு மாற்று செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கலாம்.

இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்­கான பிர­ஜா­வு­ரிமை தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து இந்­நாட்­டிற்கு வந்த எம்­மக்­க­ளுக்கு இலங்கைப் பிர­ஜா­வு­ரி­மை­யற்ற நிலையே இருந்து வந்­தது. அதனைப் பெற்றுக் கொள்ள பாரிய பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டும் பயன் கிடைக்­க­வில்லை. இது விட­யத்தில் இ.தொ.கா தலைமை வெகு விவே­க­மாக செயற்­பட ஆரம்­பித்­தது. தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு போன்று இ.தொ.கா. தலைமை செயற்­பட விரும்­ப­வில்லை. எமது மக்களின் பிரஜாவுரிமை தொடர்பாக சர்வதேசத்திற்கு சென்று நாம் மண்டியிடவோ ஒப்பாரிவைக்கவோ இல்லை. எமது நாட்டு பிரச்சினையை நாமே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பல்வேறு வகையில் சாத்வீகப் போராட்டங்களை இ.தொ.கா. மேற்கொண்டது அதற்கென ஆயுதப் போராட்டங்களில் நாம் ஈடுபடவில்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply