தினந்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ் கண்காணிக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு
அமெரிக்க உளவு அமைப்பின் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் எட்வர்டு ஸ்னோடென் அமெரிக்கா பற்றிய இரகசியங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இதனால் அமெரிக்காவில் வாழ முடியாமல் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். உலகம் முழுதும் தினந்தோறும் கையடகக்க தொலைபேசி பயன்படுத்தும் 20 கோடி குறுந்தகவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு திர ட்டி, கண்காணித்து வருவதாக தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.இத்தகவலை The Guardian நாளிதழும் Chanal 4 உம் பகிரங்கப்படுத்தியுள்ளன. குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள், யாருடன் தொடர்பு கொள்கின்றனர், அவர்களது இரகசிய தகவல்கள் பற்றியும் அந்த அமைப்பு தகவல் திரட்டியது. மேலும் பிரித்தானி அரசுக்கும் அத்தகவல்களை அனுப்பி பரிசோதிக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பரிசோதிக்க முடியும் இதற்கு டிஷ்பையர் என்று பெயர் வைத்துள்ளனர். டிஷ்பையரின் பணியானது, குறுந்தகவல் அனுப்புவது, மிஸ்ட் கோல் அலர்ட், சர்வதேச ரோமிங் கட்டணங்கள் பற்றிய அனைவரின் தகவலையும் திரட்டி ஆய்வு செய்வதாகும். மேலும் அவர்களின் வங்கி இரகசிய அட்டை எண்ணையும் கண்காணிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply