பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் கட்சிகளுக்கு டக்ளஸ் அழைப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிறுவப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற புற்று நோய் வைத்தியசாலை திறப்பு விழாவில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மக்களுக்கு தேவையானதை வழங்குவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டதாகவும் அவற்றை விடவும் தற்போதைய பாராளுமன்றத் தெரிவுக்குழு காத்திரமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply