நேபாளம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் பெருவரவேற்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று நேபாளத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு காத்மண்டு திரிபுவான் விமான நிலையத்தில் பெருவரவேற்பளிக்கப்பட்டுள்ளது. நேபாள வெளிவிவகார அமைச்சர் உபேந்ராயாதவ் விமான நிலையத்தில் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்றுள்ளார்.

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் திரிபுலான் விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், எட்டு வருடங்களின் பின்னர் அரச தலைவரொருவர் நேபாளத்திற்கு விஜயம் செய்வதை யடுத்து அங்குள்ள மக்கள் வீதியின் இருமருங்கிலும் அணிவகுத்து ஜனாதிபதி தலைமையிலான குழுவினரை ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் நேபாளத்தில் தங்கியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாள ஜனாதிபதி ராம் பரத்யாதவ், பிரதமர் புஷ்பகமல்தகல் ஆகியோர் உட்பட முக்கியஸ் தர்கள் பலரையும் சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது நேபாளத்தின் கலாசார மரபுமிக்க புனித மதத்தலங்களுக்கு ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர். குறிப்பாக புத்தபெருமான் பிறந்த புனித பூமியானலும்பினிக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

இதேவேளை, இரு நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பானது நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கிடையில் பொருளாதாரம் உள்ளிட்ட உடன்படிக்கைகள் பலவற்றிற்கும் வழிவகுக்குமென ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.

இத்தூதுக்குழுவில் ஜனாதிபதியுடன் அவரது பாரியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ஷ, அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அடங்குகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply