மின் நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மின் நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை பாதுகாப்ப அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்சக்தி, எரிசக்தி அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து இதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும், மின்உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் மற்றும் மின்விநியோகம் ஆரம்பிக்கும் இடங்கள் போன்றவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள மக்கள் தாக்குதல்கள் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்துக்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு மின்சக்தி, எரிசக்தித்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் நிலையங்களைச் சுற்றி இராணுவத்தினரும், இலங்கை மின்சாரசபையின் பாதுகாப்புப் பிரிவினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி களனிதிஸ்ஸ மின்நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலைத் தொடர்ந்தே இந்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய விமானப்படை வான் பாதுகாப்பு ராடர்கள் மற்றும் வான் பாதுகாப்புக்களை இந்தியாவில் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்து சமுத்திரத்தின் ஊடாக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply