மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ராணுவப்புரட்சியில் ஜனாதிபதி சுட்டுக் கொல்லப்பட்டார்
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா பிசாவ் நாட்டில் நேற்று ராணுவப்புரட்சி வெடித்தது. போர்த்துக்கீசியர்களின் காலனி நாடாக இருந்த இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஜோவா பெர்னாடோ நினோ வியர்ரா இருந்து வந்தார். ராணுவ சர்வாதிகாரியாக இருந்த அவர் 1990 களில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். பிறகு 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார்.
கடந்த ஒருவார காலமாக ராணுவ தளபதிக்கும், ஜனாதிபதிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இது அவர்களின் ஆதரவாளர்களுக்கு இடையேயும் மோதலாக வெடித்தது. நேற்று காலை ராணுவ தலைமையகத்தில் ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் ராணுவ தளபதி படிஸ்டா டாக்மே நா வேய் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் வீடு மீது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பயந்து போன ஜனாதிபதி வீட்டை விட்டு தப்பி ஓட முயன்றபோது அவரை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply