புதுக்குடியிருப்பு சந்தியை படையினர் கைப்பற்றினர்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான 53வது படைப்பிரிவின் படையணியான 8வது செயலணி படைப் பிரிவினரும் பிரிகேடியர் சாவேன்திர சில்வா தலைமையிலான 58வது படைப்பிரிவினரும் இன்று (மார். 03) காலை 9.30 மணியளவில் புலிகளின் இறுதித் தளமான புதுக்குடியிருப்பு நகரின் சந்தியைக் கைபற்றியுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடாத்தி புலிகளின் பாதுகாப்பு நிலைகளையும் அரண்களையும் முற்றாக அழித்துக் கொண்டு இச்சந்தியை அடைந்துள்ளனர். மேற்படி படைப்பிரிவின் படையணிகளான 12 வது கஜபா றெஜிமன்ட், முதலாவது கஜபா றெஜிமன்ட் மற்றும் 4வது விஜயபாகு படையணிகள் தற்பொழுது இச்சந்தியின் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதுடன் புலிகளின் மீதித் தளங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

படையினர் புதுக்குடியிருப்பு சந்தியையும் கைப்பற்றியுள்ளதால் புலிகளுக்கு கடைசிநேரம் நெருங்கிவிட்டதை மேலும் உணர்த்தியுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு அவதானிகள் புலிகளுக்கு இப்போது இரு மார்க்கங்கள் மட்டுமே உள்ளது. ஒன்று படையினரிடம் சரண்டைவது, அல்லது முற்றாக அவர்களாகவே அழிவதா என்பதே என்றார் படைதுறை ஆய்வாளர் ஒருவர்.

புதுக்குடியிருப்பு நகரின் மேற்கு எல்லையில் 10வது மற்றும் 12வது கஜபா படையணிகள் நிலைகொன்டுள்ளன. 6வது, 9வது, 12து கெமுனுப் படையினர் கோம்பாவிலிருந்து புதுக்குடியிருப்பு நகருக்கு வடக்காக தாக்குதல் தொடுத்து வருகின்றனர். 7வது சிங்கப் படையினரும் 10வது, 11வது காலால்படையினரும் எல்ரிரிஈயின் நிலைகளை தேடி அழிப்பதிலும் ஈடுபட்டுள்ளதாக படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ-35 பாதைக்கு தெற்காக முதலாது கஜபா படையினரும் நான்காவது விஜயபாகு படையினரும் 8வது செயலணி படையனரும் தாக்குதல் நடத்தி புதுக்குடியிருப்பு சந்தியை கைபற்றியுள்ளனர். படையினர் இப்பகுதியின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply