தீர்வுத் திட்டம் குறித்த ஜனாதிபதியுடான பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு
அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாது உள்ளதாகத் தெரிய வருகிறது.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சகல சிறுபான்மையின அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதா அல்லது இல்லையா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாமல் உள்ளது .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நேரடியாக புலிகளால் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்ட சிலர் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்க வேண்டுமென தீவிரமாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் பலர் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் தமக்கு தேர்தல் அனுகூலங்களைப் பெறுத்தருமென கருதுவதாக தனது பெயரை வெளியிடவிரும்பாத கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகிய அரசியல் கட்சிகளுக்கு தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply