எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா : வணபிதா அன்ரனி றொக்
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புடனேயே வன்னியில் மனிதப் பேரவலத்தில் சிக்கியிருக்கும் மக்கள் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக வலைஞர்மடத்தில் தங்கியுள்ள வணபிதா அன்ரனி றொக் நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார். யாழ்மாவட்ட கத்தோலிக்க அமைப்பினால் மாதாந்தம் வெளியிடப்படும் `பாதுகாவலன்` என்ற இதழின் இறுதிப் பதிப்பிற்கு வழங்கிய நேர்காணல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வட்டக்கச்சித் தேவாலயத்தின் பங்குத் தந்தையான இவர் தனது பிரதேச மக்களுடன் இடம்பெயர்ந்து தற்போது வலைஞர்மடப் பகுதியிலேயே தங்கியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக காடுகள், கரைம்பைகள், பதுங்கு குழிகள் என அலைந்து நாய்படாப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தாம் தற்போது வலைஞர் மடப்பகுதியில் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நம்பிக்கையுடன் மக்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இறந்த சடலங்களை அடக்கம் செய்வதும் காயத்துக்குக் கட்டுக்களைப் போடுவதும் கண்ணீரைத் துடைப்பதுமே அனைவரதும் அன்றாடக் கடமைகளாகிவிட்டன. அடுத்த கட்டமாக கடலுக்குள் பாய்வதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை எனத் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply