சிறீ-ரெலோ கப்பம் வாங்குவதாக பொய்யான செய்தி வெளியிடப்பட்டது ஏன்?
வவுனியா குருமண்காட்டு பகுதியில் உள்ள சிறீ-ரெலோ காரியாலயத்தில் இருந்த வின்சன், கொன்சன் மற்றும் குணா என்பவர்களை வவுனியா பொலிசார் இன்று (மார்ச். 04) காலை விசாரணை செய்துள்ளனர். வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த கந்தசாமி கதிரேசன் என்பவரின் மகளுக்கு சொந்தமான வான் ஒன்றை இருசாராரும் கையெழுத்திட்ட ஒப்பந்த மூலம் வாடகைக்கு பெற்று சிறீ-ரெலோ பாவித்து வந்துள்ளனர். அதற்குரிய மாத வாடகையை கடந்த இரு மாதங்களாக உரிய நேரத்தில் செலுத்தியும் உள்ளனர். இந்த வாகன ஒப்பந்தம் குறித்த விசாரணைக்காக அவர்களை வவுனியா பொலிசார் அழைத்துச் சென்றனரே அன்றி, நெருப்பு இணையம் வெளியிட்ட செய்தியான ‘35 இலட்சம் ரூபா கப்பம் வாங்க முற்பட்டபோது பொலிஸாரால் கைது’ என்பது அப்பட்டமான பொய்யாகும்.
வவுனியாவில் தற்போது அனைத்து வியாபார நடவடிக்கைகளில் தமது தலையை நுழைத்து `கப்பம்` பெற்றுவரும் தமிழ்க்குழு ஒன்றின் அடாவடித்தனங்கள் குறித்து சிறீ-ரெலோவின் உறுப்பினர்கள் ஐரோப்பாவில் அண்மையில் நிகழ்ந்த சந்திப்பொன்றில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர், சிலரின் உள்குத்து விளையாட்டில் பின்னணியிலேயே இந்த கைதுகள் நிகழ்ந்துள்ளது. வவுனியாவில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மேற்படி தமிழ்க் குழுவினால் சில மாதங்களுக்கு முன் சிறீ-ரெலோ வவுனியாவில் புதிதாக தொடங்க இருந்த ஒரு காரியாலயத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply