இராணுவ முன்னெடுப்பின் போது பொதுமக்கள் பாதுகாப்பில் அதிக கவனம் தேவை :சரத்பொன்சேகா

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் இராணு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கவனமாகவும் நிதானமாகவும் செயற்படுமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னி படை நடவடிக்கைக்குத் தலைமை தாங்கும் இராணுவ அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியாவிலுள்ள வன்னி இராணுவத் தலைமையகத்துக்கு இன்று  காலையில் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் சிறியதொரு நிலப்பரப்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, பொதுமக்களும் அங்குதான் வாழ்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் எதிர்கால இராணுவ முன்னெடுப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

ஆகவே பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு இராணுவ முன்னெடுப்பைத் தொடருமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply