நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்- மசூதியில் துப்பாக்கி சூடு: 20 பேர் பலி
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் மசூதியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவின் யோபே மாகாண தலைநகர் தமாதுருவில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூனி கரி கிராமம். இங்குள்ள மசூதியில் இன்று அதிகாலை ஏராளமான முஸ்லிம்கள் நாளின் முதல் தொழுகையை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த தீவிரவாதிகள், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் மசூதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் உள்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நைஜீரியாவில் தங்கள் தீவிரவாத கோட்பாட்டிற்கு எதிராக போதனை செய்யும் முஸ்லிம் மதகுருமார்களை குறி வைத்து மசூதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது. 170 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நைஜீரியாவில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் சரிபாதியாக உள்ளனர்.
இந்நிலையில், இஸ்லாமிய மாநிலத்தை உருவாக்க வலியுறுத்தி ‘போகோ ஹரம்’ என்ற தீவிரவாத அமைப்பு துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் மசூதியில் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவில் இந்த ஆண்டு மட்டும் தீவிரவாத தாக்குதல்களில் 1200 பேர் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply