வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை சந்தித்தமைக்காக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து
ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டப்படி, இதுவரை தொடர்ந்து 2 முறை அதிபராக இருந்த ஹமீது கர்சாய் இந்த முறை தேர்தலில் கலந்து கொள்ள முடியாது. 2001 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் மறுசீரமைப்பு ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது அதிகார ஒப்படைப்பு இது என்பதால் அங்கு நடைபெற்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை சந்தித்தமைக்காக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
”வரலாற்று சிறப்புமிக்க தேர்தலி்ல் உற்சாகத்துடன் பங்கேற்ற ஆப்கன் மக்களுக்கு அமெரிக்க மக்களின் சார்பாக, பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் வரலாற்றிலேயே முதல்முறையாக ஜனநாயக ரீதியிலான ஆட்சி மாற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ படை திரும்ப பெறப்பட்டதற்கு பிறகு ஆப்கன் மக்கள் தங்கள் நாட்டுக்காக முழு பொறுப்பை எடுத்திருப்பது ஆப்கானிஸ்தான் தேர்தல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். ஆப்கன் நாட்டு மக்களுக்கு ஆதரவாக பல்வேறு தியாகங்களை செய்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆப்கன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசுடன் பரஸ்பர மதிப்பு மற்றும் பொறுப்புணர்வு அடிப்படையில் நல்லுறவை தொடர தயாராக இருக்கிறோம். ஜனநாயக ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.”
இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply