இலங்கை அணியினருக்கு இன்று பாராளுமன்றத்தில் செங்கம்பள வரவேற்பு

20க்கு 20 உலகக் கிண்ண த்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாராளும ன்றத்தில் இன்று செங்கம்பள வரவேற்பளிக்கப்படவுள்ளது. செங்கம்பள வரவேற்பை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியினர் சபாநாயகர் கலரிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதுடன் இன்றுமாலை 5 மணி முதல் 8 மணி வரையில் இலங்கை கிரிக்கெட் அணியினர் பாராட்டும் வகையில் விசேட பாராட்டு பிரேரணையொன்றும் சபையில் சமர்பிக்கப்பட்டு விவாதமும் நடத்தப்படும். பங்களாதேஷில் நடைபெற்ற 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி வாகை சூடிய இலங்கை அணி நேற்று நாடு திரும்பியது. இது தொடர்பாக நேற்று சபையில் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இதேவேளை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பாக பேசப்பட்டது. இலங்கை அணியினரை கெளரவிக்கும் வகையில் அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து செங்கம்பள வரவேற்பு அளிப்பதென கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

இதற்கமைய இலங்கை கிரிக்கெட் அணிக்கு இன்று பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு செங்கம்பள வரவேற்பளிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இலங்கை – கிரிக்கெட் அணியினருக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் பகல் போசன விருந்துபசாரம் வழங்குகிறார். இந்த நிகழ்வில் சபாநாயகர் பிரதி சபாநாயகர், சபை முதல்வர், ஆளும்தரப்பு, எதிர்தரப்பு, பிரதம கொரடாக்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற செயலர் நாயகம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று மாலை 5.00 மணிக்கு சபையில் இலங்கை கிரிக்கெட் அணியினர் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருக்க அவர்களை வாழ்த்தி விசேட பாராட்டு பிரேணையும் சபையில் சமர்பிக்கப்படுவதுடன் எதிர்தரப்பு ஆளும் தரப்பு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply