பஸ்ஸை நோக்கி ஏவிய ரொக்கட் குண்டு மின்கம்பத்தில் மோதி சத்தத்துடன் வெடித்தது; சாரதியின் சாதுரியத்தால் தப்பினோம்; கிரிக்கெட் வீரர்களின் திகில் அனுபவம்

பாகிஸ்தான் லாகூர் நகரில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான இலங்கை அணியினர் நேற்று அதிகாலை நாடு திரும்பினர்.இலங்கை வீரர்களைத் தாங்கிய விசேட விமானம் நேற்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

காயமடைந்த வீரர்களுள் ஒருவர் மாத்திரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டதாகவும், ஏனையோர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை அணி வீரர்கள் நேற்றுக் காலை விமான நிலையம் வந்தடைந்தபோது அவ ர்களை வரவேற்கவென அவர்களின் உறவினர்கள் திரண்டிருந்தனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன உள்ளிட்ட வீரர்கள் தமது அநுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண் டனர்.

“கடாஃபி மைதானத்திலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள லிபர்டி சுற்று வட்டத்தை எமது பஸ் நெருங்கியபோது, பஸ் வண்டியை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு பயங்கரவாதி பஸ்ஸை நோக்கி ரொக்கட் குண் டுத் தாக்குதல் நடத்தினார். நல்லவேளையாக அது பஸ்ஸின் இலக்கை அடையாது மேல்நோக்கிச் சென்று மின்கம்பத்தில் மோதி வெடித்தது. நாங்கள் பஸ்ஸ¤க்குள் படுத்துக் கொண் டோம். சாரதியின் துணிச்சல் மிக்க செயல் பாட்டின் காரணமாகவே நாம் தப்பினோம்”, என்று அவர்கள் தெரிவித்தனர்.

பஸ்ஸை நோக்கி ஒரு பயங்கரவாதி கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியபோதி லும், அது பஸ்ஸின் கீழ்ப்பாகத்தில் வீழ் ந்து வெடித்தது. பின்னர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. தெய்வாதீனமாக சாரதி மீது சூடு விழ வில்லை. இல்லாவிட்டால், நிலைமை மோசமாகியிருக்கும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை அணியினர் அதிர்ச்சியடைந்தவர்களாய் காணப்பட்டார்கள். பாகிஸ்தானில் இனி மேல் இவ்வாறான சம்பவம் நடை பெறாது எனத் தாம் நம்புவதாக அணித் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவி த்தார்.

இதேவேளை தமக்கு அளிக்கப்பட்டி ருந்த பாதுகாப்பு திருப்திகரமானதா என்ப தைப் பற்றிக் கூற முடியாது என மற் றொரு வீரரான டில்ஷான் துஷார தெரி வித்தார்.

இலங்கை அணி மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை பல்வேறு தரப் பினரும் தொடர்ந்து கண்டித்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க எம்.பியுமான நவ்ஜோத் சிங் இது, மனிதாபிமானத்தின் பெயரால், பயங்கரவாதத்தைத் துடைத்தெறிய அனை த்து நாடுகளும் ஒன்றுபட வேண்டு மெனத் தெரிவித்தார். தாக்குதலைக் கண்டித்து லோக்சபாவில் விசேட அறிக்கையொன் றைச் சமர்ப்பித்து அவர் உரையாற்றினார்.

இந்திய அணியின் தலைவரான மஹேந்திர சிங்தோனியும் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply